பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

puslokalls mando Juliu unngulii a touten- - d. Jafaurasi 55 மூடபக்தி என்னும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள ஒரு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும், விவரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை. “இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில் எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நட்சத்திரம் லக்னம் முதலியவை பார்த்தல். கூடிவரம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்றால் கூட, அதற்கும் நம்மவர், மாசப் பொருத்தம், பகூடிப்பொருத்தம் திதிப் பொருத்தம், நாட் பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. கூடிவரத்திற்கே இப்படியென்றால் இன்னும் கல்யாணங்கள், சடங்குகள்,வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்திற்கும் பொருள் விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும்வழக்கங்களும் கார்யங்களுக்கு பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும் அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் காரிய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட் பொருத்தம், லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே கார்ய நஷ்டம் மட்டுமின்றி மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது” என்று எழுதுகிறார். பாரதியின் இந்த உரைநடையில் வடமொழிச் சொற்கள் பல கலந்திருப்பினும் மொழி சரளமாகவும் அக்காலப் பேச்சு நடையிலும் இணைந்திருப்பதைக் காண்கிறோம்.