பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 3 எடுத்துக் கூறினார். அவருடைய காலம் அடுத்து வரும் எழுச்சிக்கு ஒரு விடிவெள்ளியாக அமைந்தது. எனவே வள்ளலாருடைய காலம், அவருடைய திருஅருட்பா பாடல்கள், அவருடைய சத்திய சமரச சன்மார்க்க இயக்கம், அவர் உருவாக்கிய சத்திய தர்ம சாலைகள் தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்தது. அவருடைய கருத்துகளை உலகறியச் செய்வதற்கு, பாரதம் முழுவதிலும் கொண்டு செல்வதில் தமிழ் சான்றோர் போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்று கூற வேண்டியதிருக்கிறது. அனைத்திந்திய அளவில் இராம கிருஷ்ண பரமஹம்சரைப் போல் இராமலிங்க சுவாமிகள் தமிழ் நாட்டில் தோன்றிப் புகழ் பெற்றார். மக்களுடைய உள்ளத்தில் இடம் பெற்றார். ஆனால் இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு விவேகானந்தர் அமைந்ததைப் போல், அதன்பின்னர் பல சான்றோர் முயற்சியால் சமுகத் தொண்டுக்கு இராமகிருஷ்ணாமிஷன் அமைந்ததைப் போல, இராமலிங்கருக்கு ஒரு விவேகானந்தரும் ஒரு வலுவான இராமலிங்க மிஷனும் அமையவில்லை. அது தமிழகத்தின் துரதிருஷ்டமேயாகும். எப்படியாயினும் இராமலிங்க சுவாமிகளுடைய தமிழ்த் தொண்டு தமிழகத்திற்கும், தமிழ்மொழிக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். தமிழகத்தின் விழிப்புணர்விற்கு வள்ளலார் ஒருவிடிவெள்ளி எனக் குறிப்பிட்டோம். பின்னர் தோன்றுகிறது விடியலும், பொழுது புலர்வதும், அதை மகாகவி பாரதி அங்கீகரித்துக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். பின்னர், சுதேசமித்திரன் பத்திரிகையும் சுப்ரமணிய பாரதியாரும் தமிழ் உரைநடையில் தோன்றினர். வேறு சில பத்திரிகைகளும் அந்த அணியில் சேர்ந்தன. தமிழ் உரைநடை விரிவடையத் தொடங்கியது. பாரதி பல்வேறு துறைகளில் தமிழ் உரைநடையைக் கையாண்டார். அக்காலத்தமிழ் உரைநடை வளர்ச்சியைப் பற்றிப்