பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 79 வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மயிலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ரீவைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர், இங்கிலிஷ் தெரியாத வைதீகப் பிராமணராக இருந்தும் அதிலே சில இங்கிலிஸ் உபந்நியாசங்கள் நடந்ததை எடுத்துக் காட்டி மேற்படி லிகிதக்காரர் பளிதாபப்படுகிறார். நமது ஜனத் தலைவர்கள் இங்கிலிஷில் யோசிப்பதையும், பேசுவதையும் நிறுத்தினால் ஒழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை என்று அவர் வற்புறுத்திச் சொல்லுகிறார். மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலிஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சபைகள், சங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்சவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல், இவையெல்லாம் பாஷை வளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தமிழ் மக்கள் தமது மொழியை மேம்படுத்த விரும்பினால், அதற்கு முதலாவது செய்ய வேண்டிய காளியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்தில் விசாலமான லெளகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும் படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய செளகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலிஷ் படித்த வக்கீல்களும், இங்கிலிஷ் பள்ளிக் கூட வாத்தியார்களும் நமது நீதி ஸ்தலங்களையும் பள்ளிக் கூடங்களையும் விட்டு வெளியேறினவுடனே இங்கிலிஷ் பேச்சை விட்டு தாம் தமிழர் என்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும் போதும் சீட்டாடும் போதும் ஆசாரத்திருந்த சபைகளிலும் வருணா சிரமசபைகளிலும் எங்கும் எப்போதும் இந்தப் பண்டிதர்கள் இங்கிலிஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தி விட்டால் உடனே தேசம் மாறுதல் அடையும். கூடிய வரை இவர்கள் தமிழ் எழுத்து கற்றுக் கொள்ள வேண்டும்.