பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12_தமிழ்ப்-பத்திகைகள்_(இதழ்கள் 12. தமிழ்ப் பத்திரிகைகள் (இதழ்கள்) அச்சு எந்திர வளர்ச்சியும், அச்சுக்கலையின் அபி விருத்தியும் மொழிகளின் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாகவும் துணையாகவும் இருந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த வளர்ச்சி காரணமாக உரைநடை நூல்களும் பத்திரிகைகளும் வளர்ச்சி பெற்றன. தமிழகத்திலும், தமிழ், ஆங்கில மொழி நூல்களும், பத்திரிகைகளும் தமிழ் உரைநடை நூல்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின் பாதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் பெரிய அளவில் வளர்ச்சியும் அபிவிருத்தியும் பெற்றுள்ளன என்பதையும் அறிவோம். பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பத்திரிகைத் துறையில் பெரிதும் ஈடுபட்டு தமிழ் உரைநடையை வளர்ப்பதில் தனது சீரிய பங்கைச் செலுத்தியுள்ளார். பாரதி “கதேசமித்திரன், இந்தியா, கர்மயோகி, விஜயா, சக்கரவர்த்தினி, தர்மம், சூரியோதயம்” முதலிய இதழ்களில் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார். மேலும் பல இதழ்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அதன் மூலம் பாரதி அக்காலப் பத்திரிகைத் தொழிலில் நல்ல அனுபவங்களைப் பெற்றிருந்தார். பத்திரிகைத் தொழிலில் உள்ள கஷ்டங்களைப் பற்றி நன்கு அறிந்தவராக இருந்தார். அதன் காரணமாக நூலாசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரின் சிரமங்கள், அல்லல்கள் பற்றியெல்லாம் பாரதி தனது கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அத்துடன் பாரதி பல்வேறு துறைகளைப் பற்றியும் தனது சரளமான உரைநடை மூலம் பல அரிய கருத்துக்களை வெளிப்படுத்தி எழுதியுள்ளார்.