பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தமிழிசையைப் பற்றி 92 14. தமிழிசையைப் பற்றி தமிழ் மொழியை, இயல், இசை, நாடகம் ஆகிய முத் -தமிழாகப் பயின்றனர் அறிஞர் பெருமக்கள். இசையும் கூத்தும், ஆடலும் பாடலும் தமிழ் பண்பில் ஒன்றிணைந்ததாகும். பாரதியின் கட்டுரைகளில் தமிழிசையைப் பற்றி சிறந்த கருத்துக்களை வெளியிட்டுத் தனது சரளமான தமிழில் நகைச்சுவை ததும்ப எழுதுகிறார். பாரதியார் நல்ல இசை ஞானம் உள்ளவர். மெட்டு வைத்து ராகம் தாளத்தோடு நன்கு பாடவும் வல்லவர். அவருடைய கவிதைகள் பாடல்கள் பலவற்றிற்கு இராகம், தாளம், ஆகியவற்றையும், பல பாடல்களுக்கு மெட்டுகளையும் குறிப்பிட்டுள்ளதை அறிவோம். அவர் தமிழிசையைப் பற்றிக் குறிப்பிடும் போது "சங்கீத வித்வான்கள் பாடும்போது நவரசங்களும் வெளிப்பட வேண்டும். பாடல்களும் பொருள் தெரிந்து கேட்போரின் உள்ளத்தை ஈர்க்கும் படி பாட வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தமிழிசைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய கட்சியாகும். "நாட்டிலே சங்கீதத்திற்கு போஷனை செய்யும் ராஜாக்களும் பிரபுக்களும் இல்லை. எங்களுக்கு ஜீவனமே மனக் கஷ்டம் இல்லாமல் இருந்தாலன்றோ ரச ஞானத்தை வளர்த்துக் கொண்டு போகலாம். சில வருஷங்களுக்குள்ளே சில கீர்த்தனங்களை வரப்படுத்திக் கொண்டு ஜீவனத்திற்கு வழி தேட வேண்டிய ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்யலாம்? என்று நினைத்து மன முடைந்து போக வேண்டாம். இந்த உலகம் முழுவதிலுமே ராஜாக்களையும், பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய் விட்டது. பொது ஜனங்களை நம்ப பேண்டும். இனிமேல் கலை