பக்கம்:தாய்லாந்து.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

றேன் என்று அவர் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. He is a gem of a person என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படிச் சொல்வதற்கு இல்யாஸ் பொருத்தமான மனிதர் என் றால் அது மிகையாகாது.

“படித்துப் பட்டம் பெற்றவர்கள் பொதுவாக ஏதேனும் வேலையில் சேர்ந்து சம்பாதிப்பதைத்தானே விரும்புவார்கள்? தாங்கள் மட்டும் ஏன்...” என்று இழுத்தேன்.

“ஒரு கிளார்க் அல்லது ஆபீஸராகி, மேலதிகாரிகளுக்குக் கைகட்டி பதில் சொல்லி வாழும் சராசரி மனிதனின் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பவில்லை நான்.

பெயர் சொன்னால் பல நாடுகளுக்கும் தெரிய வேண்டும். பணத்தை நமக்கு அடிமையாக வைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு வியாபாரம் தொடங்கி அதை ஆல்போல் வளரச் செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம். என் உழைப்பும் விடா முயற்சியும் வீண் போகவில்லை என்றார் இல்யாஸ்.

“நீங்கள் மாணிக்கக் கல் வியாபாரத்தில் சர்வதேச அளவில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறீர்கள். அப்படியிருக்க, அதிலேயே இன்னும் கிளை விரிக்காமல் ஹோட்டல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?”

“நான் பல நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். எங்கே சென்றாலும், நட்சத்திர ஓட்டல்களில் மற்ற நாட்டவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், உபசரிப்பும் கீழ்த் திசையினருக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த அனுபவம் நிறையவே ஏற்படுகிறது. காரணம் இவர்கள் மற்ற நாட்டவர்களைப் போல் மிக தாராளமாகச் செலவு செய்ய முடியாதவர்கள் என்பதாயிருக்கலாம்.

சர்வதேச மக்கள் கூடும் இந்த பாங்காக் நகரத்துக்குப் பல நாட்டவர்கள் தினம் தினம் வந்து போகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வரும் நண்பர்களை வி.ஐ.பி.க்களாக வரவேற்று உபசரிக்கும் நோக்கில் ஒரு ஹோட்டலைத் தொடங்க வேண்டும் என்பது என் நீண்டகால ஆசை. அந்த ஆசையின் செயல் வடிவம்தான் இந்த உட்லண்ட்ஸ் இன்” என்றார் இல்யாஸ்.

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/87&oldid=1075277" இலிருந்து மீள்விக்கப்பட்டது