பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



162 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


என்பது போல, தன்னிடமேயிருந்தே உண்டாகித் தானே நிறைவேற்றுவது போல் நிலைத்திருக்கிற புடவி தான் ஆர்வம்.

ஆணும் பெண்ணும் ஒன்றி இணையும் போது, விண்மீன்கள் ஒவ்வொன்றும், புல்லின் நுனியும் அவர்களை ஒத்தே செல்கின்றன. ஆசையின் வேர்கள் விண்மீன்களிலும், விரைவு புல்பூண்டுகளிலும் இருக்கும் நிலையில் தவறொன்றும் நிகழ முடியாது.

ஆணும் பெண்ணும் இணையும்போது எந்த முறைமை உள்ளதோ, அதே முறைமை நிலைதான் அவர்கள் பிரியும் போதும் நிலவுகிறது. தேய்ந்துவரும் ஆர்வம் பிரிவுக்கு வழிகோல்கிறது. பிரிவு ஆர்வத்தைத் தூண்டுகிறது. எழுப்பப்பட்ட ஆர்வம் பிரிந்திருந்ததை ஒன்று சேர்க்கிறது. நாள்கள், பருவ காலங்கள் என்கிற தாளக்கட்டுதான் காதலர்கள். அவர்களுடைய மரபினருடைய தாளக்கட்டும் ஆகும்.

தொடக்கத்தின் தொடக்கத்திற்கும் முன்பாகவே இயற்கையின் காலத்திலேயே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது.

199. உடம்பு மட்டுமே

எல்லை கடத்தல் என்பது எல்லைக்கு உட்பட்தே. வெளியே செல்லும் வழி என்பது உள்ளே வரும்