பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் முன்னுரை

படிப்பினைகள் வேண்டும் !

அன்பு நிரம்பிய சிறுவர் சிறுமியர் கட்குக் கதை சொல்வதென்றால் எனக்கு எப்போதுமே ஒரு தனி ஆனந்தம் பிறக்கும். அப்போது நானும் ஒரு சிறுவனாக மாறிவிடுவேன். பின், மகிழ்வுக்குக் கேட்கவும் வேண்டுமா? திரும்ப முடியாத கனவுலக நாட்களல்லவா அவை!

இளைய பாரதத்தினருக்கு நான் எழுதும் பதினான்காவது கதைப் புத்தகம் இது. இவ்வரிசையில் இவ்வாண்டு இன்னும் சிலவும் வரவிருக்கின்றன.

சிறுவர் உலகம் தனிப்பண்பு பூண்டது. அறிவை விதைத்து அறிவை வளர்க்கும் பிராயம் இது, பண்பு மிக்க, பாடம் நிறைந்த, நாட்டுப்பற்று மிகுந்த கதைகளைத்தான் சிறுவர் சிறுமியர்கட்கு நான் சொல்லுவேன் அது போலவே தான் இப்பொழுது நான் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நீதி சொல்லும்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை பயக்கும்.

'உமா’வில் பொறுப்புள்ள ஆசிரியராக நான் பணி இயற்றியகாலை எழுதப்பட்ட கதைகள் இதில் செம்பாதியளவில் சேர்க்கப்

பட்டிருக்கின்றன. மிகுதி, இத்தொகுப்புக் கென்றே எழுதப் பட்டவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாஷ்கண்ட்_வீடு.pdf/6&oldid=1111712" இலிருந்து மீள்விக்கப்பட்டது