பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாது. அறமற்ற பொருள் பொருளாகாது; இன்பமும் தராது. எனவே அறத்தைச் சார்ந்தே பொருளும் இன்பமும் இருக்கின்றன. எனவே அறம் முதலிலும் பொருள் நடுவிலும் இன்பம் இறுதியிலும் வைக்கப்பட்டது. எ வ் வ ள வு பொருத்தம்!

அரசு, கல்வி, தொழில்,செல்வம் ஆகியன பொருள்பாற் பட்டன.

அடுத்து வருவது'வான் சிறப்பு. இதுவும் பொருட்பாற் பட்டதே. வான் வறண்டால் பொருளும் இன்பமும் வருமோ? வராது, வராது!

“நீத்தார் பெருமை அடுத்த அதிகாரம். நீத்தார் யார்? அவர்கள் சிறப்பு யாது?

நீத்தார், பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர்; குன மெனும் குன்றேறி நின்றவர் எவ்வுயிர்க்கும் அன்பு காட்டி வாழ்ந்து சிறப்புப் பெற்றவர். மனமொத்த ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து வாழ்ந்தவர்; இன்பம் நுகர்ந்தவர்.இந்த அன்பின் பெருக்கு என்ன அளிக்கும்?

மக்கட் பேறு

இத்தகைய அன்புக் கலப்பே சிறந்தது. அது மன மாசைக் கழுவும் இயல்புடையது. மன மாசு ஊறு செய்யும் தடைகளை நீக்கும்; பிற உயிர்களிடம் அன்பு கொள்ளச் செய்யும். இந்த நுட்பம் நீத்தார் பெருமை"யில் சிறிதும், நூலின் மற்றப் பகுதிகளிலும் விளக்கப்பட்டுள்ளன.

மன மாசை நீத்த அறவோரே, நீத்தார்.

இயற்கையோடு இயைந்த வாழ்வில் இருக்க கடவுளிடம் உறுதி தேவை. அசையாத உறுதி தேவை. எனவே முதலில் ‘கடவுள் வாழ்த்து இடம் பெறுகிறது.

‘பொருளும் இன்பமும் அறத்தில் அடங்கும்.’

13