பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

பாவம் திரு.வி.க. கதர் ஜிப்பாவும், மேல் குட்டையும் அன்றி வேறு எதுவும் இல்லாத திரு.வி.க. குளிர் தாங்க முடியாமல் நடுங்கினர். கழுத்திலே சுற்றிய குட்டையால் தலையையும் காதையும் மூடிக் கொண்டார். அப்படியும் குளிர் தாங்க முடியவில்லை .நடுங்கினர். பார்த்தார் அம்மை யார். தாம் போட்டிருந்த காஷ்மீர் சால்வையை எடுத்தார். திரு.வி.க.வுக்குப் போர்த்தினர்.

எல்லாரையும் வாட்டிய குளிர் அம்மையாரை மட்டும் வாட்டாது விடுமோ? வாட்டியது; வாட்டியது நெடுநல் வாடை'யென வாட்டியது. அம்மையார் குளிரால் நடுங் கினர். தாம் உடுத்தியிருந்த பட்டுச் சேலையால் காதையும் கழுத்தையும் மூடிக் கொண்டார்.

குறிப்பிட்ட இடம் சேர்ந்தார்கள். எந்த நிகழ்ச்சியின் பொருட்டுச் சென்றார்களோ அந்த நிகழ்ச்சியை முடித்துச் சென்னை திரும்பினர்கள். மறுநாள் எனது அறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன் நான்.

வந்தார் திரு.வி.க. நாற்காலியில் உட்கார்ந்தார்’ ‘'நீ என்ன சொன்னுய்?’ என்று உறுமினர். நான் விழித்தேன். அந்தப் பெண்மணியைப் பற்றிக் கூறினயே! அது எவ்வளவு தவருன கருத்து?’ என்று சொன்னர்.

இந்த நிகழ்ச்சியைக் கூறினர். ‘சைவம் எங்கிருக்கிறது? உருத்திராட்சத்திலா? திரு நீற்றுப்பட்டையிலா?’ என்று வினவினர்.

‘அன்பு! அன்பு! அன்பே சைவம்’ என்றார். ‘அம்மையார் அன்பு மயமானவர். அன்பு ஊற்று. அவரே பெருஞ் சைவர்’ என்றார்.

நான் மனம் மாறினேன். அம்மையார் பால் பெருமதிப்புக் கொண்டேன்.

அவ்வம்மையார் யார்? டாக்டர் தருமாம்பாள்.