பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118

வீட்டு மாடியில் அமர்ந்திருந்த திரு.வி.க பெருங் குரல் எடுத்துப் பேசினர். தொழிலாளருக்கு ஊக்கமூட்டி ஞர். தமது அரும்பெரும் தலைவரின் முகம் கண்டு குரல் கேட்டு, சொற் கேட்டு ஆறுதல் பெற்றுத் திரும்பி னர் தொழிலாளர். இவ்வாறு பல காட்கள் சென்றன. சமரசம் ஏற்பட்டது.

தொழிலாளர் சார்பில் திரு.வி.க கடத்திய இறுதிப் போராட்டம் இதுவே. பின்னர் திரு. வி. க உடல் கலிந்து, கண் பார்வை இழந்து படுக்கை கொண்டார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து காற்பத்து மூன்றாம் ஆண்டு திரு. வி. க வின் மணி விழா நாடு முழுவதும் கடை பெற்றது. எம். எஸ். எம் தொழிலாளர் சங்கமும் சென்னைத் தொழிலாளர் சங்கமும் முறையே திரு.வி.க. வின் மணி விழாவைக் கொண்டாடின. இரண்டு சங்கங்களிலும் திரு. வி. க வின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன.

இவ்விரு உருவப்படங்களும் வேறு வேறு காலங் களில் திரு. வி. க எத்தகைய தோற்றம் அளித்தார் என்பதைக் காட்டுவன.

முப்பததைக்து ஆண்டில் திரு. வி. க எத்தகைய தோற்றமளித்தார் என்பதைக் காட்டுவது சென்னைத் தொழிலாளர் சங்கப் படம்.

அறுபது ஆண்டில் திரு. வி. க எத்தகைய தோற்றம் அளித்தார் என்பதைக் காட்டுவது எம். எஸ். எம். ரயில்வே தொழிலாளர் சங்கப்படம்.

இருபத்தைக்து ஆண்டுகள் தொழிலாளருக்கும், காட்டுக்கும் தொண்டு செய்து எவ்வாறு இளைத்தார் என்பதைக் குறிக்கும் இத் திருவுருவப் படங்கள்.