பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

121

கடற்கரைக் கூட்டம் ஒன்றிலே திரு. வி. க. பேசினர். நகரசபையின் வரி உயர்வைக் கண்டிப்பதற் கென்று கூட்டப் பட்ட கூட்டம் அது. ககர சபையிலே தியாகராய செட்டியார் தலைமையிலே நன்மை விளைய வில்லை என்று கூறி, ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்கிப் பேசினர் திரு. வி. க.

ஓரிரண்டு நாட்கள் சென்றன. பிராட்வே வழியே நடந்து கொண்டிருந்தார் திரு. வி. க. செட்டியாரின் மோட்டார் வண்டி அவ்வழியே வந்தது. செட்டி யாருக்கு வணக்கம் தெரிவித்தார் திரு. வி. க. செட்டி யாரும் பதில் வணக்கம் செய்து கொண்டே வண்டி விட்டு இறங்கினர். திரு. வி. க. வின் கையைப் பிடித் தார்; தமது முதுகைக் காட்டினர். ‘அறை அப்பா! அறை’ என்றார்.

திரு. வி. க. வுக்கு ஒன்றும் விளங்கவில்லை; விழித் தார்; திகைத்தார்.

‘அன்று கடற்கரையிலே வாயால் அறைக்திரே! இப்போது கையால் அறையும்’ என்றார்,

அப்போதுதான் திரு. வி. க வுக்கு விளங்கியது. இதற்குள் சிறு கூட்டம் சேர்ந்து விட்டது. செட்டி யாரின் காரில் ஏறி ஒளிந்தார். திரு. வி. க.

செட்டியாரின் கார் புறப்பட்டது. இருவரும் பேசிக் கொண்டே சென்றனர். கார், காஸ்மோ பாலிட்டன் கிளப்பை அடைந்தது. காரினின்றும் இறங்கினர் திரு. வி. க. செட்டியாரிடம் விடை பெற்றார்; வீடு சென்றார்,

திரு. வி. க. வை நாடு கடத்த எண்ணினர் லார்ட் விலிங்டன். நாடு கடத்தினரா? இல்லை. காரணம்