பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு பெரியார் ஈ வே. ரா. காங்கிரஸ் தொண்டு செய்த காலம்.

வைக்கத்தில் தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. பெரியார் அங்கு சென்றார். சத்தியாக்கிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் பெரியாரைச் சிறையில் தள்ளியது.

அப்போது திரு. வி. க. என் செய்தார்? வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து கவசக்தி'யில் எழுதினர். பெரியாரின் தியாகத்தை வியந்து வியந்து பாராட்டி எழுதினர் வைக்கம் வீரர் என்பது பெரியாருக்குப் பட்டமாக வழங்கலாயிற்று. அப்பட்டம் வழங்கிய பெருமை திரு .வி. க.வுக்கே உரியதாகும்.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் பெரியார். அச் சுயமரியாதை இயக்கம் எங்கிருந்து பிறந்தது? திரு. வி. க. வின் சன்மார்க்க இயக்கத் தினின்றும் பிறந்தது.

சுயமரியாதை இயக்கமும் சன்மார்க்க இயக்கமும் நூற்றுக்குத் தொண்ணுாறு பங்கு ஒற்றுமையுடையன; பத்துப பங்கே வேற்றுமை. இவ்வேற்றுமை தான் இவ்விருவருக்கும் போர் மூட்டியது.

ருஷ்யா சென்று திரும்பினர் பெரியார். கண்பர் சமதர்மக் கண் பெற்று வந்தது கண்டு மகிழ்ந்தார் திரு.வி.க. பெரியாரும் தாமும் மீண்டும் ஒன்று பட்டுத் தொண்டாற்றும் காலத்தை எதிர்பார்த்திருந்தார் திரு. வி. க. ஆல்ை அரசாங்கம் என் செய்தது? பெரியாரைக் கைது செய்தது; சிறைக்கனுப்பியது.