பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

147

2யிட்டார்; மறுத்தார்; கண்டித்தார்; சைவத்துக்கு முரண்பாடு என்றார்.

திரு. வி. க. என் செய்தார்; தமது பேச்சிலே மடத்துச் சைவரின் கூற்றை வெட்டிச் சாய்த்தார்; காயன்மார் வரலாறுகளை எடுத்துக் காட்டினர்; தமது செயல் சரி என்று நிலை நாட்டினர்.

மடங்கள் சமயம் வளர்க்கத்தோன்றியவை; ஆனல் அங்கே சாதிக்கட்டுகளே வளர்கின்றன. மடங்களைச் சீர் திருத்தும் நோக்குடன் தேசபக்தனிலும் கவசக்தி’ யிலும் கட்டுரைகள் பல வரைந்து கிளர்ச்சி செய்தார் திரு. வி. க. மகாகாடுகளில் கோயில் சீர்திருத்தம் பற்றிப் பேசுவார்; விளக்குவார்; தீர்மானங்கள் கிறை வேற்றுவார்.

ஒரு சிறு உத்தியோகஸ்தன் கோயிலுள் தலை காட்டியதும் அவன், கோயில் அதிகாரிகளால் தெய்வ மாக வரவேற்கப்படுகிருன். கட்டணம் எனும் பேய் கோயிலை விட்டு அகல்வதே இல்லை. நுழைவுக்கு இவ் வளவு, அபிஷேகத்துக்கு இவ்வளவு, ஆராதனைக்கு இவ்வளவு என்று கட்டணத்திட்டம் கோலப்பட்டிருக் கிறது. கோயில் சுங்கச்சாவடியா? கள்ளர் குகையா? என்று கூறுவார்; மேடைகளில் பேசுவார்.

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் திரு. வி. க. வின் கண்பர்; வட ஆர்க்காடு ஜில்லா காங்கிரஸ் தலைவராயிருந்தவர். திரு. வி. க. வேலூர் செல்லும் போதெல்லாம் பெரிதும் அவரே சாப்பாட்டு வசதி செய்வார். ஆல்ை அவர் உடன் அமர்ந்து உண்ண LDfTL–i–fTff •