பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13

‘நலன்; வேண்டுவதும் அஃதே. தாங்கள் குறிப்பிட்ட பணியாற்ற இயலாமை குறித்து வருந்துகிறேன். இம்முறை மன்னிக்க.”

இவ்வளவே, அக்கடிதத்தில் இருக்கும். வேறு ஒரு கடிதம்.

உழுவலன்பீர். தங்கள் முடங்கல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பணியாற்ற ஒருப்படுகிறேன். ஆவன செய்க.”

இவ்வளவுக்கு மேல் எக்கடிதத்திலும் காணல் இயலாது. எழுதிய கடிதங்களைத் திரு.வி.க.வின் முன்வைப்பேன். அவற்றை மீண்டும் ஒரு முறை படிப்பார்.

“உன் கையெழுத்து நன்றாயிருக்கிறது. என்கையெழுத்து நன்றாயிராது’ என்பார்.

“திரு.வி.க என்று சுருக்கமாகக் கை யெழுத்திடுவார். பின் அவற்றைத் தாமே எடுத்துக்கொண்டு பெரிய வரிடம் செல்வார்.

பெரியசாமி, இவற்றைத் தபாலில் சேர்த்துவிடு’ என் பார். பிறகு என்னிடம் வருவார்.

வா! தம்பி! போகலாம்’ என்பார். நான் அவரைப் பின் தொடர்வேன். எலியட்ஸ்ரோடு (தற்போது ராதாகிருஷ்ணன் சாலை) வழியாகக் கடற்கரை நோக்கி நடப்போம். மணலைத் தாண்டிக் கடலோரம் செல்வோம். கடல்நீர் காலை வருட நடப்போம். திருவான் மியூர் வரை நடப்போம்.

இந்த வாழ்க்கை வரலாற்றிலே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை எல்லாம் எனக்குச் சொல்வார்.

சொல்லிக்கொண்டே நடப்பார் அவர். கேட்டுச் கொண்டே நடப்பேன் நான். இடையிடையே குறுக்குக் கேள்விகளும் கேட்பேன். அவர் பதில் சொல்வார். பேசிக் கொண்டே இருவரும் பாம்பன் சுவாமிகள் சமாதியை அடைவோம்.