பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

149

எடுத்தனர். காங்கள் வைதிகர். ஆனால் உங்கள் சுந்தரப் பேச்சு எங்கள் சாதியையும் மறக்கச் செய்தது’ என்றனர்.

ஆதி திராவிடர் திருமணங்கட்குச் செல்வார் திரு. வி. க., சாப்பிடாமல் வரமாட்டார். சாதிக் குறும் பின் வேரை அறுக்கவே இவ்வாறு செய்வார். சண்முகம் என்பவர் திரு. வி. கவின் மானக்கருள் ஒருவர், பெங்களுரில் வேலைபார்த்து வந்தார். சென்னை யில் அவருக்குத் திருமணம் கடந்தது. அத் திருமணத்துக்குத் திரு. வி. க. சென்றாரிலர். காரணம் உடன் நலமின்மையே. பின்னே இராமலிங்க சுவாமிகள் திருநாள் கொண்டாட்டத்தின் பொருட்டு பெங்களுர் சென்றார் திரு. வி. க. சண்முகமும் அவரது மனைவியும் திரு. வி. கவைக் கண்டனர். உணவு கொள்ள வரு மாறு அழைத்தனர். அவர் தம் அழைப்பை ஏற்றார் திரு. வி. க. அவருடன் மாரண்ட ஹள்ளி மிட்டாதார் ஒருவரும் தொடர்ந்தார். இருவரும் விருகதுண்டு திரும்பினர்.

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தி இரண் டாவது ஆண்டு திருநெல்வேலி ஜில்லா மகாநாடு தென் காசியில் கடைபெற்றது. திரு. வி. க. தலைமை வகித் தார்; வரவேற்புத் தலைவர் இஸ்லாமானவர். மகாகாடு முடிந்ததும் திரு. வி. க. வைச் சாப்பிட அழைத்தார் அவர். அவர் தம் அழைப்புக்கு இணங்கினர் திரு.வி.க. இஸ்லாமானவர் வீட்டில் உணவு கொண்டார்.

கோயில்களில் பலியிடும் கொடுமை நீண்டகாலமாக கிகழ்ந்து வருகிறது; அக் கொடுமையை நிறுத்தப் பாடு பட்டார் திரு. வி. க.