பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

170

கியதிப்படி பதினைந்து நாள் படுக்கையில் கிடந்தார் திரு.வி.க.

வெள்ளைப் பூண்டை நசுக்கிச் சாறு பிழிந்து, அரை ஆழாக்குப் பாலில் எட்டுச் சொட்டு விட்டுக் காலையில் உட்கொள்வார். ஒரு மணி நேரத்துக்குப் பின் கோதுமைக் கஞ்சி அருந்துவார். பகலில் மோரும் சோறும். தொடர்ந்து ஓர் ஆரஞ்சு. பிற்பகல் மூன்று. மணிக்குக் கடலை ரசம் குடிப்பார். பச்சை வெங்காயத் தைக் கடித்து மென்று தின்பார். இரவு கோதுமை அப்பமும் பாலும் உட்கொள்வார். இப்படிப் பதினைந்து நாட்கள் சென்றன.

பதிருைம் நாள் இரண்டு பர்லாங் தூரம் நடந்தார். அடுத்த நாள் நான்கு பர்லாங் கடந்தார். மறுகாள் ஒரு மைல் கடந்தார். பிறகு சம்பந்தம் திரு.வி.க.வைச் சோதித்தார். உமது இருமல் கொடியது அன்று’ என்றார்.

பின்னே திரு.வி.க.மீண்டும் இராயப்பேட்டை சேர்ந் தார். ஒரு நாள் டாக்டர் சம்பந்தம் திரு.வி.க.வின் சிறு நீரைச் சோதித்தார். நீர் இழிவு நோய் என்றார். மூளை வேலை செய்வோர்க்கு இந்நோய் வருதல் இயல்பு’ என்றார். உணவு முறைகளை மாற்றச் சொன்னர்.

நீர் கோய் பற்றி மேல் காட்டு அறிஞர் பலர் எழுதிய நூல்களை எல்லாம் படித்தார் திரு.வி.க. சோதனைக் கருவிகள் சிலவற்றையும் வரவழைத்தார்.

நீர் கோயின், வரலாறு, இயல்பு, கூறு முதலிய வற்றை எல்லாம் நூல்களைக் கொண்டு தெளிந்தார். கருவிகளைக் கொண்டு தமது நீரை அடிக்கடி சோதிதது. வந்தார்.