பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

180

யங்களை ஏற்பார். கார்ல் மார்க்சின் மனிதாபிமானத் தைப் பாராட்டுவார். அதே சமயத்தில் சோவியத் காட்டில் ஸ்டாலின் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டு வார். சோவியத் புரட்சியின் அடிப்படை வன்முறை யாதலின் இத்தகைய தவறுகள் செய்ய நேரிட்டது என்பார். புரட்சி அஹிம்சை வழியில் ஏற்படுமாயின் சன்மார்க்க ஆட்சி நிலவும் என்பார். காந்தியின் அஹிம்சையும், மார்க்சின் பொதுமையும் கலந்தால் சமரச சன்மார்க்கப் புரட்சி ஏற்படும்’ என்பார்.

புராணப் பிரசங்கம் செய்வோர் வருவர்; சைவப் பிரசாரகர் வருவர்; அவரிடம் சைவ சித்தாந்தம் பற்றிப் பேசுவார். சிவஞானசித்தியாரிலிருந்து மேற்கோள் காட்டி விளக்குவார். சைவம் என்பது விபூதிப் பட்டையில இல்லை என்பார். உருத்திராட்சத்தில் இல்லை என்பாா. அன்பே சிவம் என்பார். தென் டுை டைய சிவனே போற்றி, எங்காட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதன் கருத்தை விளக்குவார். எனவே, சிவன் ஒரு குறிப்பிட்டவர்தம் கடவுள் அல்லன். எக் நாட்டவர்க்கும் இறைவன் அவன்’ என்பார். அதுவே சமரசம் என்பார். அதுவே சன்மார்க்கம்’ என்பார். அதுவே எனது கொள்கை என்பார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்ச நிலையிலிருந்த போது பலர் அவரிடம் வருவர். இந்தியை ஆதரிப்போர் வருவர். இந்தியை எதிர்ப்போரும் வருவர்.

‘இந்திய காட்டிற்கு ஒரு பொது மொழி வேண்டும். அது இந்தியே என்பதில் ஐயமில்லை. ஆல்ை இந்தி பேசாத மக்கள் மீது அதை கட்டாயமாகத் திணிப்பது கூடாது. கட்டாயம் எதிர்ப்பையே விளைவிக்கும்’ என்பார். இந்தி எதிர்ப்பு முகாமினர் இது கேட்டு மகிழ்வர்; செல்வர்.