பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

29. முடிவுரை

திரு.வி.க. பெரியவர்; மிகப் பெரியவர்; ஒப்பற்ற பெரியவர்; இருபதாம் நூற்றாண்டு தந்த இணையற்ற பெரியவர்.

நூல் பல கற்றவராக விளங்குவர் சிலர். ஆனல் தாம் கற்றனவற்றிற்கு ஏற்ப ஒழுகும் சீலம் இல்லாத வராயிருப்பர். திரு.வி.க.வோ, நூல் பல கற்றார், தாம் கற்ற கல்விக்கு ஏற்ப ஒழுகும் சீலராக விளங்கினர்.

கற்கக் கசடற கற்றபின்

கிற்க அதற்குத் தக. என்றார் பொய்யா மொழியார். அம்மொழியினை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகினர் திரு.வி.க.

பட்டம் பதவி ஆகியவற்றுக்கு ஒருபோதும் ஆசைப்

படாதவர் திரு.வி.க. பட்டம் பதவிக்காகப் பேயாயலை கின்றவர் பலரை இந்நாளில் காண்கிருேம். பட்டம் பதவியே வாழ்வின் குறிக்கோள் என்ற கொள்கை யுடன் பாடுபடுவோரையும் காண்கிருேம். பட்டம் வழங்குவோரும், பதவி கல்குவோரும் திரு.வி.க வாய் திறந்தால் வழங்கக் காத்திருந்தனர். ஆனல் திரு.வி. கவோ பட்டம் பதவியை வேண்டினர் அல்லர்.