பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

87

அவர் எண்ணம். வீடு திரும்பும்போது பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்று வணங்கி வருவார்; தவற மாட்டார்.

ஒரு நாள் நண்பர்களுடன் கடலாடினர். அவர் ஒரிடத்தில் கின்று ஆடினர். மற்றவர் மற்றாேரிடத்தில் ஆடினர். இரண்டிடத்துக்கும் இடையே ஒரு பள்ளம். அப் பள்ளத்தில் தோழர் ஒருவர் சிக்கினர்; தண்ணிரில் மூழ்கித் தத்தளித்தார். கண்டார் கலியான சுந்தரனுர்; மனம் பதைத்தார். மற்றாேரலை வந்து அந்த கண்பரைப் புரட்டித் தள்ளியது. அவ்வளவில் பாய்ந்தார் கலியாண சுந்தரனர்; தோழரின் முடிபற்றிக் கரையில் சேர்த்தார்.

தோழருக்குத் தெளிவு ஏற்பட அரைமணி கேரம் ஆயிற்று. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கலியாண சுந்தர னர் கடலில் இறங்குவது ஒழித்தார்; கடலாடல் விடுத் தார்; கடற்கரையில் கின்று நீலப் பரப்பில் கருத்துச் செலுத்தி மகிழத் தொடங்கினர்.

இராயப் பேட்டையில் மற்களங்கள் பல இருந்தன. அவற்றுள் ஒன்று, வடிவேல் முதலியார் மற்களம். அங்கே ஓர் அரிய வித்தை போதிக்கப்படும். அதாவது கத்தி சுழற்றல். ஒருவர் அண்ணுந்து படுப்பார். அவரது கைகள், கெற்றி, மார்பு முதலியவற்றின்மீது காய்கள் வைக்கப்படும். என்ன காய்? வாழைக்காய் புடலங்காய் முதலியன. ஒருவர், கூரிய பட்டாக்கத்தி சுழற்றி வருவார்; அண்ணுந்து படுத்திருப்பவரின் கை ஒன்றன் மீதுள்ள காயை வெட்டுவார். மீண்டும் ஒரு முறை சுழற்றி வருவார்; இன்னொரு கைக் காயை வெட்டுவார்; மற்றும் ஒருமுறை கத்தியைச் சுழற்றி