பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

மயிலாப்பூர் சென்ட் எப்பாஸ் உயர்நிலைப் பள்ளி யிலே தமிழாசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் தேவப்பிரசாதம் பண்டிதர். அவர் கலியாணசுந்தர னரின் கெழுதகை கண்பராயினர். இருவரும் சேர்ந்து கம்பராமாயணம், வில்லி பாரதம் முதலிய நூல்களை ஆராய்ந்தனர்.

அக்காளில் சுவாமி வேதாசலம் எனும் மறைமலை அடிகள், அடிக்கடி இராயப்பேட்டைக்கு வருவார்; குகானந்த நிலையத்தில் தங்குவார். கலியாணசுந்தரனர் தமக்குத் தோன்றும் ஐயப்பாடுகளை எல்லாம் மறைமலை அடிகளிடம் கேட்டுத் தெளிவார். அடிகளாரும் படுக் கையிற் கிடந்தவாறே கலியாணசுந்தரனுரின் வினுக் களுக்கு விடையளிப்பார்.

மயிலை மகா வித்வான் தணிகாசல முதலியாரிடம் பாடங் கேட்டபோது கலியாணசுந்தரனுர்க்கு சம்ஸ் கிருதம் கற்பிக்க விரும்பினர் மகாவித்வான். அது முற்றுப்பெறவில்லை.

எனினும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் எனும் வேட்கை மட்டும் கலியாணசுந்தரனுரை விட்டு அகல வில்லை. பொருள் முடை அதற்கு இடையூருக கின்றது. என் செய்வார்? கற்றிலனுயினும் கேட்க எனும் பொய்யாமொழிப் புலவர் கூற்று அவருக்கு ஊக்கம் அளித்தது. கற்றல் விட்டார்; கேட்டலில் கருத்துச் செலுத்தினர்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் கரைகண்ட பெரியார். அவர் திருவல்லிக்கேணி யிலே சில காலம் தங்கியிருந்தார். மாலையில் கடலோரம் செல்வார். அப்போது அவர் உடன் கலியாணசுந்தர ருைம் செல்வார். சுவாமிகள் உபநிடதக் கருத்துக்களை