பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47

பின்னத்துாரிலே ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் நாராயணசாமி ஐயர் என்பது. தமிழ் இலக்கணப்

புலவர் அவர்.

அவரிடம் சென்று கேட்டுத் தெளிய விரும்பினர் கலியாணசுந்தரனர். பின்னத்துரர் சென்றார். ஐயரின் வீட்டைத் தேடிச் சென்றார், வீட்டில் ஐயர் இலர். விசாரித்தார். ஐயர் குளத்தில் நீராடுவதாகக் கூறினர். அக்குளம். தேடிச் சென்றார் கலியாணசுந்தரனர்; குளத்தில் ஐயரைக் கண்டார். ஐயர் துணி தோய்த்துக் கொண்டிருந்தார்.

தம்மை நோக்கி ஓர் இளைஞர் வருதல் கண்டார் ஐயர், துணி தோய்ப்பதை நிறுத்தினர்; வந்தவரை விசாரித்தார்; வந்த காரியமும் காரணமும் அறிந்தார் மகிழ்ந்தார்.

இல்பொருள் உவமை என்பது என்ன? உள்ளுறை உவமை என்பது என்ன என்று விளக்கினர்; எடுத்துக் காட்டுகள் பல கூறினர். கேட்டார் கலியாணசுந்தரனர். ஐயம் நீங்கினர்; ஊர்திரும்ப எண்ணினர். ஐயருக்கு நன்றி கூறினர். போய் வருகிறேன்’ என்றார்.

குளத்தில் நீராடு, என்னுடன் வீட்டுக்கு வா; உண்டு இ8ளப்பாறு, பின்போய் வா’ என்று பணித் தார் ஐயர்.

அவ்வாறே நீராடினர் கலியாணசுந்தரளுர்; ஐயருடன் வீடு சென்றார், பகல் உணவு கொண்டார். சிறிது இளைப்பாறினர்; விடை பெற்றார், ஊர் திரும்பினர்.*

  • கூறியவர் திரு. வி. க.