பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4

மகாத்மா காந்தி தென்னடு நோக்கிஞர். காந்திய மின் சக்தி எங்கும் பாய்ந்தது. எழுச்சி! எழுச்சி! எழுச்சி. வேகம்! வேகம்! வேகம். எழுச்சியும் வேகமும் என் செய்தன? இளைஞர் உலகை ஆட்கொண்டன. இளைஞர் உலகை ஆட்கொண்ட அவை என்னை மட்டும் சும்மா விடுமோ? வேகம் என்னையும் ஆட்கொண்டது. எழுச்சி என்னையும் பற்றியது. -

விளைவு என்ன? 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்ற நூலைக் கண்ட உடனே சிக்கெனப் பிடித்தேன்.

அந்நூல் என்னைப் பெரிதும் கவர்ந்தது. நூல் மட்டுமா கவர்ந்தது? நூலாசிரியரும் கவர்ந்தார். அவரைப்பற்றி அறிய விரும்பினேன்.

நண்பர் சிவகுருநாதன் பெண்ணுகடத்தைச் சேர்ந்தவர். பெண்ணுகிடம் தென் ஆர்க்காடு ஜில்லாவில் உள்ளது. பெண்ணுகடத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்று நடத்தி வந்தார். சிவகுருநாதன். கடந்தைத் தமிழ்ச்சங்கம் என்பது அச் சங்கத்தின் பெயர்.

சங்கத்தின் வாயிலாக அவர் திரு. வி. க வுடன் தொடர்பு கொண்டிருந்தார். எனவே திரு. வி. க. வைப் பற்றி ஒரளவு அறிந்திருந்தார். அவரிடம் திரு. வி. க. வைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டேன். திரு. வி. க. வைக் காணும் வேட்கை கொண்டேன்.

‘திரு. வி. க. வைக் காணல் வேண்டும். அவர் தம் பத்திரிகையில் எழுதல் வேண்டும். நானும் பத்திரிகை ஆசிரியளுதல் வேண்டும். நூல்கள் எழுதல் வேண்டும்,’ என்று எண்ணியது என் மனம்.

மாலை நேரத்திலே காவிரி ஆற்றின் படிக்கட்டுகளிலே அமர்ந்து கொள்வேன். நீரில் கால்களைத் தொங்கவிடுவேன். சுழித்துச் சுழித்து ஒடும் காவிரிநீர். அந்த ஓட்டத்துக்கு ஏற்ப எனது மனக்கோட்டையும் பறக்கும்.

ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தி ஐந்தாம் ஆண்டு. ‘சுதந்திரச் சங்கு’ என்ற பத்திரிகையிலே உதவி ஆசிரியளுகப் பணிபுரியும் வாய்ப்பும் பெற்றேன்.