பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60

இருவரும் வெள்ளிக் கிழமை மாலையே புறப்படுவர்; வண்ணுரப் பேட்டை சென்று தங்குவர்; சனிக்கிழமை பகல் திருவொற்றியூர் நோக்குவர்.

இருவரும் கடலோரம் உலவுவர்; கிற்பர், மணல் மேடுகளில் அமர்வர். எழுத்தறியும் பெருமான் மாலை, வடிவுடை மாணிக்கப் பாடல் முதலியவற்றைப் பாடுவர் கலாம்பிகை, கேட்டு மகிழ்வார் திரு. வி. க. கமலாம் பிகைக்குப் பாடத் தெரியும் என்பது வீட்டவருக்குத் தெரியாது. ஏன் எனில் வீட்டில் அவர் பாடியதில்லை.

சிலப்பதிகாரக் கதைகளைச் சொல்வார் திரு. வி. க. கேட்டு மகிழ்வார் கமலாம்பிகை. திருவொற்றியூரப்பனை யும் பட்டினத்தார் சமாதியையும் தரிசித்து இருவரும் வீடு நோக்குவர். இவ்விருவர் தம் அன்பு வாழ்க்கையில் தோன்றிய குழவிகள் இரண்டு. ஒன்று ஆண்; மற்றாென்று பெண்.

ஆண் குழவி, பிறந்த வாரத்திலேயே இறந்தது.

பெண் குழந்தைக்குத் திலகவதி என்று பெயர் சூட்டினர்.

‘அக்குழந்தை, கண்காட்டி முகம் காட்டி கை காட்டிக் கால் காட்டி ஓராண்டு வளர்ந்து, பின் மறைந்தது.”

கமலாம்பிகை கோய் வாய்ப்பட்டார். எலும்புருக்கி கோய். அது பரம்பரை நோய். அந்நோய் கமலாம்பிகை யின் தாயை விழுங்கியது. சகோதரர் ஒருவரையும் விழுங்கியது.

கமலாம்பிகையின் பொன்னுடல் மெல்ல மெல்லக் கரைந்தது. மூன்று திங்கள் சென்றன. இயன்ற சிகிச்சை செய்தனர்.

  • திரு. வி. க. வாழ்க்கைக் நிப்புக்கள்)