பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68

களில் உள்ள முரண்பாடுகளையும் சுருங்கிய முறையில் கூறினர் திரு. வி. க.

இரண்டினமும் கலப்புற்று நீண்ட நாளாகியதை யும், இரண்டு நாகரிகமும், கங்கையும் யமுனையும் போல் ஒன்று பட்டு விட்டமையையும் இன்னுளில் திராவிடர் யார் ஆரியர் யார் என்று பிரித்தல் இயலாது என்றும் விளக்கினர். எல்லா வகுப்பாரும் ஒன்று பட்டு, அடிமைத் தளையை நொறுக்கி, உரிமை பெறப் பாடுபடவேண்டும் என்றார். அவ்வாறு ஒன்று படாது வகுப்புவாத எரியூட்டுவது காட்டைப் பாழாக்கும் என்றார். ஜஸ்டிஸ் கட்சி தென்னுட்டுப் பிராமன ரல்லாதார் எல்லார்க்கும் உரியது ஆகாது என்றார், தென்னுட்டுப் பிராமணரல்லாதாரில் பெரும் பான்மை யோர் காங்கிரஸ் மனப்பான்மையுடையவர் என்று தெளிவாக்கினர்.

பிராமணரல்லாதார் எல்லாரும் ஒருங்கு கூடி ஜஸ்டிஸ் கொள்கையை மறுக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்தார்.

திரு. வி. க. வின் பேச்சு, பிராமணரல்லாதாருக்கு ஊக்கம் அளித்தது; தமக்கென ஒரு தனிச் சங்கம் காணத் துண்டியது.

தனிச் சங்கம் காணும் முயற்சி திரு. வி. கோபால சாமி முதலியாரால் தொடங்கப்பட்டது. அதன் பயனுக ஒரு சங்கம் தோன்றியது.

அச்சங்கத்தின் பெயர் சென்னை மாகான சங்கம்” என்பது. சங்கத்தின் தலைவர் திவான் பகதூர் கேசவப் பிள்ளை. லாட் கோவிந்ததாஸ், ஈ. வே. இராமசாமி நாயக்கர், காகை பக்கிரிசாமி பிள்ளை, சீர்காழி சிதம்பர காத முதலியார், தஞ்சை சீனி