பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

நாயக்கர், ஆதிநாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப். லாட் கோவிந்ததாஸ் ஆகியோர் டைரக்டர் ஆயினர், அமைச்சர் சுப்பராய காமத், லிமிட்டெட் கம்பெனி அமைப்புப் பெரிதும் இவர் வழியே உழன்றது. லிமிட் டெட் கம்பெனி அமைப்பைத் திரு.வி.க. விரும்பினர் அல்லர். எனினும் டைரக்டர் எல்லாரும் தேச பக்தர் ஆக இருந்தமை அவருக்கு ஆறுதல் அளித்தது.

அந்தக் காலத்தில் தமிழ் தினப் பத்திரிகைகள் எப்படியிருந்தன? ஆங்கிலமே பெரிதும் விரவியிருந்தன. திரு.வி.க. என்ன செய்தார்? துய தமிழில் எழுதி ர்ை; ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ் சொற்களை வழங்கினர். எளிய துரய தமிழ் கடை. சிறு சிறு வாக்கியங்கள். வேகம்! வேகம் ஆவேச கடை, எழுச்சி யூட்டும் கடை. ஆங்கிலக் குறியீடுகள் தமிழ்ப் பத்திரிகைகளில் அப்படியே வெளியிடப்பட்டன. அவற்றை யெல்லாம் திரு. வி. க. தமிழாக்கினர். இப்பொழுது தமிழ்ப் பத்திரிகைகளிலும், மேடை களிலும் பிற இடங்களிலும் காணப்படும் தமிழ் வழக்கு யாவும் திரு.வி.க. புகுத்தியவையே.

வகுப்பு வாதக் கொள்கையை வளர்க்கத் தோன்றி யவன் திராவிடன். அக்கொள்கையைத் தேய்க்கத் தோன்றியவன் தேச பக்தன்.”

இவ்விரண்டு பத்திரிகைகளுக்கும் போர் மூளா திருக்குமோ? மூண்டது; கொள்கைப் போர். வகுப்பு வாதத்தால் விளையும் தீமைகளை எடுத்துக் காட்டுவான் தேச பக்தன்'; வகுப்பு வாதத்தைத் தாங்கிப் பேசுவான் திராவிடன்'; தாக்கி எழுதுவான் தேச பக்தன்.”

அக்காலத்தில் பெருந் தலைவர் எல்லாரும் மேடை யேறிப் பேசிய மொழி எம்மொழி? ஆங்கிலம்; ஆங்கிலம்.