பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77

திரு. வி. க. இரக்கம் கொண்டார்; காமத்தின் வேண்டுதலுக்கு இணங்கினர். தேசபக்தன்’ காரியால யத்திலிருந்து வெளியேறினர்.

இருவர் அவருக்குத் துணை போயினர். ஒருவர் இராயப்பேட்டை பாலசுந்தர முதலியார். மற்றாெருவர் சாமிகாத சர்மா. மூவரும் மயிலாப்பூர் சென்றனர்; குளக் கரையில் அமர்ந்தனர்; பலப்பல பேசினர்.

இரவு மணி எட்டு. சாமிகாத சர்மா தம் வீட்டுக்குச் சென்றார். அப்பமும் பாலும் கொணர்ந்தார். அப்பத்தை உண்டனர். பாலை அருந்தினர். சாமிநாத சர்மா வீடு. சேர்ந்தார். மற்ற இருவரும் பலகை வாராவதி சேர்க் தனர்; படகு ஏறினர். திருப்போருர் சென்றனர். அங்கே ஒரு காள் தங்கினர். பின் திருக்கழுக் குன்றம் சேர்ந்தனர். அங்கே இரண்டு நாள் தங்கினர். எப். பத்திரிகையிலும் தேசபக்தன்’ பறிமுதல் செய்தி. காணப்படவில்லை. இருவரும் சென்னை திரும்பினர். தேசபக்தன் காரியாலயம் சேர்ந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தேசபக்தன்’ ஆபீஸ் போக்தார் என்றும், ஆசிரியர் திரு.வி.க வைத் தேடினர் என்றும் அறிவித்தார் மானேஜர்.

உடனே திரு.வி.க என்ன செய்தார்? டெலிபோனை எடுத்தார்; போலீஸ் கமிஷனரைக் கூப்பிட்டார்.

  • இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்து என்னைத் தேடினர் என்று கேள்வியுற்றேன். நான் வெளியூர் சென்றிருக் தேன். என்ன செய்தி?’ என்று கேட்டார்.

“இன்ஸ்பெக்டரை இப்போது அனுப்புகிறேன்.” என்று கூறினர் கமிஷனர்.