பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


நான் மிக மகிழ்ந்தேன். பெரியவர் கூறியவாறே மறு நாள் சாது அச்சுக்கூடம் சென்றேன். திரு. வி. க. வைக் கண்டேன். மறுநாள் வருமாறு அவர் கூறினர். மறுநாள் குறிப்பிட்ட நேரம் சென்றேன்; கண்டேன். சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் வரச் சொன்னர்.

குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட நேரம் மீண்டும் சென்றேன். திரு. வி. க., உலகநாத முதலியார் இருவரும் இருந்தனர்."வா தம்பி!” என்று அழைத்தனர்.

"உனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்பது பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். இப்போது அதிக சம்பளம் கொடுக்கி முடியாது. உனக்கு எவ்வளவு வேண்டுமோ கேள்" என்றார் திரு. வி. க.

'நும் கடன் அடியேனைத் தாங்குதல்; என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று பதில் அளித்தேன்.

எனது பதில் கேட்டுத் திரு. வி. க. மகிழ்ந்தார்; உலகநாத முதலியாரைப் பார்த்தார். உலகநாதர் உள்ளே சென்றார். பஞ்சாங்கம் எடுத்து வந்தார். எனது பெயர், நட்சத். திரம் ராசி முதலியவற்றைக் கேட் டு அறிந்து கொண்டார் பஞ்சாங்கத்தைப் பார்த்து ஒரு நல்ல நாள் குறிப்பிட்டார் அன்று வரச் சொன்னர். அவ்வாறே வருவதாகக் கூறி. விடைபெற்று எனது வீடு திரும்பினேன்.

குறிப்பிட்ட நல்ல நாளன்று வேலைக்குச் சென்றேன். திரு. வி. க., உலகநாத முதலியார் ஆகிய இருவரும் இருந் தனர் இருவரையும் வணங்கினேன். ‘வா தம்பி, இரு” என்றனர். ஆங்கிருந்த பெஞ்சின்மீது அமர்ந்தேன்.

சிறுவன் ஒருவனே அழைத்தார் உலகநாத முதலியார். ஆபீஸ் அறையைத் திறக்கச் சொன்னர் அறை திறக்கப் பட்டது. அவ்வறை வெள்ளே பூசப்பட்டிருந்தது. அறை நடுவே மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. மேசையின் முன் னும் பின்னும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மற்றாெரு மேசைமீது பைண்டு செய்யப்பட்ட நவசக்தி இருந்தது.

குறிப்பிட்ட நல்ல நேரத்தில் என்னை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றார் திரு. வி. க. என்னை