பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85

காங்கிரஸ் மகாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவு எல்லா மொழிகளிலும் முன்னரே பெயர்த்து வைக்கப் பட்டது.

காங்கிரஸ் மேடையில் தலைவர் உரை படிக்கப் பெறும் அதே சமயத்தில் இந்தியா முழுவதும் கூட்டங் கள் கூட்டி, அந்த அந்த மொழிகளில் அந்தத் தலைமை யுரையைப் படிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த ஏற்பாட்டின்படி சென்னையில் பெசண்ட் அம்மையாராக கின்று தொண்டாற்றினர் திரு. வி. க.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு ரெளலட் சட்டத்தைக் கண்டது இந்தியா. அந்தச் சட்டத்தை எதிர்க்க உறுதி கொண்டார் மகாத்மா காந்தி, காங்கிரஸ் முழுவதும் காக்தி வச மாகாத காலம் அது. எனவே காடு முழுவதும் சத்தி யாக்கிரக சபைகள் கிறுவி, அச்சபை மூலம் போராடத் திட்டமிட்டார். அதன் பொருட்டு அவர் சென்னை நோக்கினர். காந்தியடிகளைச் சக்திக்க விரும்பினர் திரு.வி.க, அப்போது தேசத் தொண்டு புரியும் பொருட்டுச் சேலம் சென்றிருந்தார்; சேலம் விஜயராக வாச்சாரியாரிடம் தமது கருத்தைத் தெரிவித்தார்.

விஜராகவாச்சாரியார் என் செய்தார்? கடிதம்

ஒன்று கொடுத்தார். அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார் திரு. வி. க. அரக்கோணம் சேர்க் தார்.

பம்பாய் மெயிலில் வந்தார் மகாத்மா. அவரைச்

சந்தித்தார் திரு. வி. க. கடிதத்தைக் கொடுத்தார். படித்தார் மகாத்மா.