பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97

“பெயருக்குக் கூடவா பஞ்சம்?’ என்று கை யெழுத்துப் போட்டார் திரு. வி. க.

உப்புப் போருக்குரிய களமாக வேதாரண்யம் தேர்ந்தெடுக்கப் பட்டது. திரிச்சியினின்றும் தண்டு களுடன் வேதாரணியம் நோக்கிப் புறப்பட்டார் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்.

சிதம்பரத்தினின்றும் ஒரு படையை கடத்திச் செல்ல முயன்றனர் சிலர். அவருள் தலையாயவர் தண்டபாணிப்பிள்ளை. அப்படைக்குத் தலைமை வகித்து கடத்திச் செல்லுமாறு திரு. வி. க. வை அழைத்தார் தண்டபாணிப்பிள்ளை. திரு. வி. கவும் சம்மதம் தெரி வித்தார்; சித்தமானர்.

வேதாரண்யத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடி பட்டார். தொடர்ந்து தலைமை வகித்து கடத்துபவர் திரு. வி. க. என்ற வதந்தி கிளம்பியது. அச்செய்தி கேட்ட திரு. வி. கவும் போர்க்களம் செல்லச் சித்த மானுர்.

ஆனல் தொடர்ந்து தலைமை வகித்துப் போரை கடத்துமாறு ஆச்சாரியார் நேரடியாகத் திரு. வி. க. வுக்குக் கடிதம் எழுதவில்லை. வேறு வகையில் தெரி விக்கவும் இல்லை. தமக்குப் பின் தலைவராக கே. சந்தானத்தை நியமித்தார் ஆச்சாரியார்.

அவ்வளவில் கின்றாரல்லர். உப்புச் சத்தியாக்கிரகம் வேறு எவ்விடத்திலும் நிகழலாகாதென்றும், வேறு எவ் விடத்தினின்றும் உப்புப் போர்ப்படை புறப்படலாகா தென்றும் அறிக்கை வெளியிட்டார்.

திேரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்

தி.-7