பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

திருக்குறளில் செயல்திறன்

ஊக்கத்தோடு இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்துக்கும் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்குமாக யானைமீது பாய்ந்து தாக்குகிறது.

யானை ஒரு பக்கம் திரும்புவதற்குள்ளாகப் புலி பல பக்கங்களிலும் தாக்குகிறது. அத்தாக்குதலைத் தாங்க முடியாமல் யானை அஞ்சி ஓடுகிறது. கூர்மையான நீண்ட தந்தத்தை உடைய மிகப்பெரிய யானை மிகச் சிறிய நகத்தையும் மிகச்சிறிய உருவத்தையும் உடைய புலியின் தாக்குதலுக்கு அஞ்சுகிறது.

காரணம், புலிக்கு உள்ள ஊக்கமும் சுறுசுறுப்பும் யானைக்கு இல்லாமையேயாகும். இக்காட்சியை வள்ளுவர் ஒரு குறளால் காட்டிச் செயல்திறனுக்கே ஓர் ஊக்கத்தை ஊட்டுகிறார்.

         பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
         வெரூஉம் புலிதாக் குறின் (599)

இது நான்காவது யானை.

5. துணைகொண்டு செய்

எல்லா மனிதராலும் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியாது என்ற உண்வையையும் வள்ளுவர் உணர்ந்திருக்கிறார். ஒருவனால் செய்ய முடியாத காரியத்தைச் செய்யும் படி அவனைக் கட்டாயப்படுத்துவது தவறு என்றும் கருதுகிறார். ஒவ்வொருவர்க்கும் செயல்திறன் என்பது ஓரளவிலேயே இருக்கும் என்றும் எண்ணுகிறார்.

சிலரால் சில காரியங்களைச் செய்ய முடியாது. மனிதனால் ஒரு மதங்கொண்ட யானையைப் போய்ப் பிடிக்க