பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்வேல் பறியா நகும்!

61


கைவேலை எறிந்து விடுவது வீரர்களுக்கு அழகல்லவே! களிற்றின் மீது மட்டுமே எறிய வேண்டிய வேலை என் மீது எட்டியிருந்து ஏன் எறிந்தான்? ஒரு கால் இவன் மதயானையை ஒழித்த என்னையும் ஒரு மதயானை எனக் கருகிவிட்டானே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் அது ஏளனச் சிரிப்பு ஆகும்.

என் கை வேலோ யானையின் உடலையும் ஊடுருவித் துளைத்தது, இவ்வேலோ என் உடலையும் துளைக்கவில்லை இது எதற்குப் பயன்படப் போகிறது என்று எண்ணிச் சிரித்தானோ? அவ்விதமாயின் இது மனக் குறைச் சிரிப்பு ஆகும்.

வேலைப் பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன் முன் இல்லாமை கண்டு, மறைந்திருந்து தாக்கும் இழிந்த மக்களும் தமிழகத்தில் உள்ளார்களே? என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத் திருப்பானோ? அவ்விதமாயின், இது துன்பச் சிரிப்பு ஆகும்.

தன் கை வலிமைக்கு முன் மதயானையும் நிற்க ஆற்றாமல் போயிற்று. எதிரிகள் நமக்கு எம்மாத்திரம் என் எண்ணி நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது பெருமிதச் சிரிப்பு ஆகும்.

தன் மார்பு வேலால் தாக்கப்பெற்ற போதும் அதை எண்ணி வருந்துவதைவிட்டு, தன் கைவேலால் தாக்கப் பெற்ற மதயானை ஒன்று அஞ்சி அலறி ஒடுவதைக் கண்டு அகமகிழ்ந்து நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது வீரச் சிரிப்பாகும்.

யானையோடு போரிட்ட களைப்பையுங் கருதாது. மாற்றாரின் வேலால் உடல் துளைக்கப்பெற்ற துன்பத்தையும் நினையாது, மீண்டும் போரில் விருப்பங்கொண்டு