பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

என்று எண்ணும்பொழுதே நமக்கும் ஒரு நகைப்பு உண்டாகிறது.

தேடிச்சென்ற கருவி வழியிலேயே தானே வந்து அகப்பட்டுவிட்டதே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது மகிழ்ச்சிச் சிரிப்பாகும்.

மார்பில் தைத்த வேல் ஊடுருவிச் சென்று தன்னை வீழ்த்திவிடாமல் கையால் பறித்து எடுக்கும் அளவில் மட்டும் தைத்ததேயென்று நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது வெற்றிச் சிரிப்பாகும்.

கை வே லை வறிந்துவிடுவது வீரர்களுக்கு அழகல்லவே! களிற்றின் மீது மட்டுமே எறிய வேண்டிய வேலை என்மீது எட்டியிருந்து ஏன் எறிந்தான்? ஒரு கால் இவன், மதயானையை ஒழித்த என்னையும் ஒரு மதயானை எனக் கருதி விட்டானோ என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் அது ஏளனச் சிரிப்பு ஆகும்.

என் கைவேலோ யானையின் உடலையும் ஊடுருவித் துளைத்தது. இவ் வேலோ என் உடலையும் துளைக்கவில்லை; இது எதற்குப் பயன்படப்போகிறது? என்று எண்ணிச் சிரித்தானோ? அவ்விதமாயின் இது மனக்குறைச் சிரிப்பு ஆகும்.

வேலைப் பறித்துக் கையிற் பற்றிக்கொண்டு, வேல் எறிந்த வீரன் தன்முன் இல்லாமை கண்டு, "மறைந்திருந்து தாக்கும் கோழை மக்கள் தமிழகத்திலும் உள்ளார்களே" என எண்ணிப் புண்பட்ட மனத்தோடு நகைத்திருப்பானோ? அவ்விதமாயின் இது துன்பச் சிரிப்பு ஆகும்.

தன் மார்பின்மீது வேலால் தாக்கப்பெற்றபோதும், அதை எண்ணி வருந்துவதைவிட்டுத் தன் கைவேலால்