பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. எய்தாப் பழி

       "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
        எய்துவர் எய்தாப் பழி."

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “ஒழுக்கமுடைமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.

ஒழுக்கத்தை அடைந்தவர் உயர்வையும், இழுக்கத்தை அடைந்தவர் பழியையும் அடைவர் என்பது இதன் பொருள்.

ஒழுக்கமுடையவர் உயர்ந்தோராகவும், அதனை இழந்தவர் தாழ்ந்தோராகவும் கருதப்பெறுவர் என்பது குறிப்பு.

ஒழுக்கத்தை நல்லொழுக்கம் எனவும், தீயொழுக்கம் எனவும் குறிப்பிடுவதுண்டு. எனினும், “ஒழுக்கம்” என்பது நல்லொழுக்கத்தை மட்டுமே குறிக்கும் என்பது இக் குறளின் முடிவு.

“மக்களாய்ப் பிறந்தவர்கள் உயர்வை அடைய வேண்டும். அதற்குரிய ஒரே வழி ஒழுக்கத்தைப் பெறுவதுதான்” என்பது, இக்குறளின் மேற்பாதியின் கருத்து.

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை” என்பதனால் அது இல்லாத கல்வி, கேள்வி, ஆடை, அணி, பட்டம்,