பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (Y5

11. துறவு (சந்நியாதம்)

துறவாவது ஒருவன் தவம்பண்ணாநின்றகாலத்து யாதானும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும், அதனைப் பற்றறத்துறத்தல். இது மயக்கமற்றார் க்கு வருவதொன்றாதலின், இதன் பிற் கூறப் பட்டது.

341. அடல் வேண்டு மைத்தன் புலத்தை விடல் வேண்டும்

வேண்டிய வெல்லா மொருங்கு.

(இ-ள்) பிறப்பறுப்பார்க்கு பொறிகளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும் அதற்காகத்தான் விரும்பின வெல்லாவற்றையும் ஒரு காலத்தே விடுதல் வேண்டும், (எ-று).

இது, தொடர்ப்பாடுளதாயின் நுகர்ச்சியுண்டாம்; அஃதுண் டாக மயக்க முண்டாம்; அதனானே பிறப்புண்டாம்; ஆதலால்

துறக்க வேண்டும், என்றது. l

342. இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை

மயலாகு மற்றும் பெயர்த்து.

(இ-ள்) யாதொரு பொருளையும் இலதாகல் தவத்திற்கியல் பாகும், அப் பொருள்களையுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரண மான மயக்கத்தைத் தரும், (எ-று).

இது, மனத்தினாற் பற்றிலாதார்க்குப் பொருளுடைமையான் வருங்குற்ற மென்னை யென்றார்க்குக் கூறப்பட்டது. 2

343. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

ஹற்றார்க் குடம்பு மிகை.

( இ-ள்) பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்கும் மற்றுஞ் சில தொடர்ப்பாடுகளை உளதாக்குவது யாதனை கருதியோ? (எ-று).

சிறிதாயினும் தொடர்ப்பாடுளதாயின் அதனைத் துறவென்று கொள்ளப்படாதென்றது; அது நோன்பிற்கியல்பின்மையால். 3

  • H H _, H *— m. 1. மைந்தின்’ என்பது மனக். பாடம்