பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

12. மெய்யுணர்தல்

(இன்) பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கிப் பிறவா

மையாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாவது. (எ-று)

பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு எனப்பட்டது. இதனாற் .வியது தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாயும் பிறப்பில்லை பாயும் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டு மென்றவாறாயிற்று மேல் மெய்யிலக்கணம் கூறினார், இது உணருமாறு கூறிற்று. 4

955. ஒர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

(இ-ள்) உள்ள மானது உள்ளபொருளை யாராய்ந்து ஒரு தலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக, (எ-று).

மெய்யுணர்ந்தவர்கள் பின்பும் பிறப்புண்டென்று நினைப்பரா யின் அஃது ஐயப்படுதல் என்னும் குற்றமாம்; அதனாற் பிறப்பை நினையா தொழிக.

356. ஐயத்தி னிங்கித் துணிந்தார்க்கு வையத்தின்

வான நணரிய துடைத்து.

(இ-ன்) மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்களுக்கு, இவ்வுலகத்தினும் மேலுலகம் அணித்தாதலை யுடைத்து, (எ-று)

துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின், அவ்வறி வுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின், அணித்தாமென்றார். இஃது எல்லாம் அறியுமென்றது. 6

357. இருணிங்கி யின்பம் பயக்கு மருணிங்கி

மாசறு காட்சி யவர்க்கு. (இ-ஸ்) மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடை யார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம், (எ-று)

இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு (முத்தி) யின்ப முன் டாமென்றது. 7