பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

13. அவாவறுத்தல்

- (இ-ள்) பற்றற்றவரேன் பார் ஆசையற்றவர்; தவர் பற்றினையறுத்தாராயினும், ஆசையற்றாரைப் பற்றறுத்திலர், (எ-று)

ஆசையறன போலப்

தொடர்ப்பாடுகளைந்தார்க்கு, மனத்தினாற் பற்றுண்டானால் வரும் குற்றம் என்னை? அதனாலுறுவதோர் நுகர்ச்சியின்மையான் என்றார்க்குக் கூறப்பட்டது. 4.

365. தரஉய்மை யென்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

(இ-ள்) ஒருவர்க்கு அழுக்கறுத்தலென்பது ஆசையின்மை; அ வ்வாசையின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். (எ-று)

இது பொருள்மே லாசையில்லாதார் பொய் கூறாராதலின். மெய் சொல்ல (அவாவின்மை) வரும் என்று அவாவறுத்தற்குக்

கருவி கூறிற்று. 5

366. அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.

(இ-ள்) ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினை தான் வேண்டின நெறியாலே வரும், (எ-று,

கேடில்லாத வினையாவது அறத் தொழில்; அவ்வறம் ஆசை யில்லாதார்க்கு முயலாம லெய்தும் என்றது. 6

367. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை

யாண்டு ம..தொப் தில்.

(இ-ள்) அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை; அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை, (எ-று)

இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது. 7

368. இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்

துன்பத்துட் டுன்பங் கெடின்.