பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

11. காலமறிதல்

( இ-ள்) கதுமென அவ்விடத்தே யுடம் புவேரார்; காக்குச் செய்யுங்காலம் வரவு பார்த்து மனம்வேர்ப்பர் ஒள்ளியார். (எ-று)

வேர்ப்புப் பொறாமையால் வருவதொன்று. பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்க வேண்டுமென்றது. 4

485. செறு த ரைக் காரிைற் சுமக்க விறுவரை

காணிற் கிழக்காத் தலை .

(இ-ள்) பகைவரைக் கண்ணினாலேகாணின் தலையினாலே சுமக்க; இறுவரைகானின், தலைகீழாகி விடலாம், (எ-று)

பகைவரைக்கண்டு வாளாதே இருப்பது ஆண்மை அல்ல என்று கருத வேண்டா; அவரைக் கண்டால் தலையிலே கொண்டாற் போலத்தாழ்ச்சி செய்து பின்பு அவர் இகழ்ச்சியாலே தலையினின்று விழவிட்டாற்போல வினைசெய்யலாம் என்று கூறப்பட்டது, 5

486. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத் I,]

(இ-ள்) காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் (3 r6u) ஒடுங்கிஇகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்குச்சீர்த்தகாலம் வந்த விடத்து (அக்கொக்குக்) குத்துமாறுபோலத் தப்பாமல் செல்க, (எ-று).

இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றி இகழ்ந்தார் போல இருத்தல் வேண்டுமென்பதுரஉ. ம், க | ல ம் வந்தால் தப்பாமல் விரைந்து செய்யவேண்டுமென்பது உம், கூறிற்று. 6

487. எய்தற் கரிய தியைத் தக்கா லந்நிலையே

செய்தற் கரிய செயல்.

(இ-ள்) பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன் னாற் செய்தற்கு அரிய வாகிய வினைகளைச் செய்து முடிக்க (எறு) .

இடி காலம் வந்தால் அரிதென்று நாணாது செய்யவேண்டு மென்றது. 7

  • கொடுக்குப் போல என்பர் மணக்குடவர்