பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

14 தெரிந்து வினையாடல்

514. அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந் நான்கு

நன்குடையான் கட்டே தெளிவு. (இ-ள்) அன்புடைமையும், அ றி வு ைட ைம யு ம், ஒரு பொருளை ஆராய்ந்து துணிவுடைமையும், அவாவின்மையு மென் னும் நான்கு குணங்களையும் நிலைபெற வுடையவன் கண் ணதே எல்லாப்பொருளின் கண்ணும் தெளிதல், (எ-று)

இது பெரும்பான்மையும் அறவாராய்ச்சிக்கு கடவாறை நோக்கிற்று. 4

515. வாரி பெருக்கி வனம்படுத் துற்றவை யாராய்வான் செய்க வினை.

(இ-ள்) பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத் துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக, (எ-று)

பொருள் வருவதற்கிடமாவது நிலமுதலான விடம்; அதனைப் பெருக்குதல் ஆவது காடு கெடுத்து நாடாக்குதல் முதலாயின. வளம் படுத்தலாவது பயிர் ஏற்றுங்கால் வா ன் பயிர் ஏற்றுவித்தலும் பாழான இடங்களில் குடியேற்றி ஆயம் பொருள் உண்டாக்குதலும். இது பெரும்பாலும் (அரசன் வினை) செய்வானை நோக்கிற்று. 5

516. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை

பதற்குரிய னாகச் செயல்.

(இ-ஸ்) இவ்வினைக்கு இவன் உரியவனென்று ஆராய்ந்த

பின்பு, அவனை அவ்வினை செய்தற்கு உரியவனாகப் பண்ணுக, (எ-று).

ஒழிந்த காரியங்களின் வினை செய்வாரை ஆக்குமது கூறிற்று. 6

517. இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்

ததனை யவன்கண் விடல்.

(இ-ன்) இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து, பின்பு அக்கருமத்தினை அவன்

சண்னே விடுக, (எ-று) .