பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

22. ஊக்கமுடைமை

நினைத்ததனானே ஆக்கமுண்டாமோ என்றார்க்கு இது கூறப்பட்டது. 4

595. உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

(இ-ள்) நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க; அந் நினைவு முடியாமல் தப்பினும், முயன்று பெற்றதனோடு ஒக்கும், (எ-று).

இது, தப்பினும் பழிக்கப்படா தென்றது. 5

596. உரமொருவற் குள்ள வெறுக்கைய. தில்லார்

மர மக்க ளாதலே வேறு.

(இ-ள்) ஒருவனுக்கு அறிவாவது உள்ள மிகுதியுடைமை, அஃதில்லா தாரை மரமென் று சொல்லப்படும்; மக்கள் வடிவோ மரத் தின் வேறா கத் தோ ன் றுகின்றது, (, -று) -

அறிவும் இதுதானே யென்றது. G

597. சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டுன்றுங் களிறு.

(இ-ன்) தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடை. யார், மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடுஆற்றும் களிறுபோல, (எ- று) .

இது, உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது. 7

598. ஆக்க மிழந்தேமென் றல்லாவா ருக்க மொருவந்தங் கைத் துடை யார்.

(இ-ள்) செல்வத்தை இழந்தே மென்று அலம் வருவாரல்லர்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார், (எ-று).