பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

2. அமைச்சியல்-1 . அமைச்சு

(இ-ள்) அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல் வினையும் உடையனாய், எல்லாக் காலத்தினும் செய்யுந் திறன் களையும் அறிய வல்லவன் அரசற்கு அமைச்சனாவான், (எ-று)

தேர்ச்சித்துணை ஆதலின் தேர்ச்சித்துணை என்று பெயரிட் டார். எஞ்ஞான்றும் என்றது நிகழ்காலத்தினும் எதிர்காலத்தினும். :

634. தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையரச்

சொல்லலும் வல்ல தமைச்சு.

(இ-ள்) ஒருவினையை நன்றோதீதோ என்று ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்

சனாவான், (எ-று). 4.

635. கருவியுங் கால முஞ் செய்கையுஞ் செய்யு

மருவினைய மாண்ட தமைச்சு.

(இ-ள்) செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படா மற் செய்து முடித்த லும் இந்நான்கும் மாட்சிமைப் பட்டவன் அமைச்சனாவான், (எ-று)

செய்ய வேண்டும் அரியவினையாவதுமறுமண் டலங்கோடல்; கருவியாவது யானை குதிரை முதலியபடை, காலமாவது நீரும் நிழ லுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல். 5

636. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.

(இ-ள்) மாற்றரசரிடத்து உள்ளாரையும் அவர்க்கு நட்பா கிய அரசரையும் அவரிடத்தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப் பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கோடலும், தம்மிடத்து நின்றும் பிரிந்தாரைக் கூட்டிக்கொளலும் வல்லவன் அமைச்சனாவான். (எ-று). G

3ே7. செயற்கை யறிந்தக் கடைத்து முலகக்

தியற்கை யறிந்து செயல்.