பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

2. சொல்வன்மை

(இ-ள்) ஒருவன் சொல்ல வல்லனுமாய் அதனைச் சோர விடு தலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின். அவனை மாறுபாட்டின் கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது. (எ-று)

இம் மூன்று பகுதியினும் என்பதனால் அவனைச் சொல்லில் வெல்வாரில்லை என்றது. &

o 49. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்

பொருளு மதினினுஉங் கில்.

(இ-ள்) சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அத னின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை, (எ-று).

திறனறியலே, புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய் கூறாமையும் உளவாம் ; ஆதலின், அறனாயிற்று, அரசர் மாட்டும் ஏனையோர் மாட்டும் தகுதியறிந்து சொல்லுதலால் பொருளுமாயிற்று; என்னை? அதனானே ஆக்கமும் கேடுமாகலான். 2 அறனும் பொருளும் பயக்கு மென்றது. 9

---

850. நாநல னென்னு நலனுடைமை யந் நலம்

யாநலத் துள்ளது. உ மன்று.

(இ-ள்) நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒரு வற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது, (எ-று)

இஃது எல்லா அழகினும் மிகுந்த அழகு என்றமையால், இன்பம் பயக்கு மென்றது. சொல்வலை வேட்டுவன்’ என்றாரு

முனர் (புறம்-232) 10