பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

2. சொல்வன்மை

(இ-ள்) தாம்சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்துகொள்ளுதல் மாட்சி ைமற் குற்றமற்றாரது கோட்பாடு, (எ -று) . o

இது, நயம்படக் கூறுதலே யன்றிப், பிறர் சொல்லுஞ் சொல் லறிந்தும் சொல்லல் வேண்டுமென்றது. 4

645. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

(இ-ள்) ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால், அச் சொல்லின்கண் சோர்வைப் போற்றிக் காக்க, (எ-று)

இது, சோர்வுபடாமற் சொல்ல வேண்டு மென்றது. 5

6 ! 6. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சில சொல்ல றேற்றா தவர்.

(இ-ள்) பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்ற மற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லுதலை அறிய மாட்டா தார், (எ-று) .

மன்ற-தெளிய. இது, சுருங்கச் சொல்லல் வேண்டுமென் ந9து. * 6

647. இணரு ழ்த்து நாறா மலரனையர் கற்ற

துணர விரித்துரையா தார்.

(இ-ள்) இணராக மலர்ந்தும் நாற்ற மில்லாத பூவையொப் பர், கற்றதனைப் பிறரறிய விரித்து உரைத்துச் சொல்லமாட்டாதார். (எ-று).

இது, சுருங்கச் சொல்லுதலே யன்றி, வேண்டுமிடத்து விரித் துஞ் சொல்ல வேண்டு மென்றது. 7

648. சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை

பிகல்வெல்ல ல் யார்க்கு மரிது.