பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

2. சொல்வன்மை

சொல் வன்மை யாவது வார்த்தைசொல்ல வல்லவ னாதல். அ ரசர் க்குக் கல்வி இன்றியமையாததுபோல அமைச்சர்க்கு இஃது இன்றியமையாமையின், அதன் பின் கூறப்பட்டது.

641. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை

வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.

( இ-ள்) சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்த பின்பு எ-று).

சொல்வன்மையாயின. பலவற்றுள்ளும் தோலாவகை சொல்லு தல் சிறப்புடைத்தாதலின் இது முற் கூறப்பட்டது. f

842. விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

(இ-ள்) சொற்களைச் சேர்த்து இனிதாகச் சொல்ல வல்லா ரைப்பெற்றாராகில், உலகத்தார் தாமே விரைந்து சென்று செய்யுந் தொழில்யாது’ என்று கேட்பர், (எ-று).

இஃது இனிதாகச் சொல்லவேண்டு மென்றது. *

643. கேட்டார்ப் பிணிக்குத் தகையவாய்க் கேனாரும்

வேட்ப மொழிவதாஞ் சொல்.

(இ-ள்) வினா வினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதாரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது, (எ-று).

கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் எனினும் அமை யும்; சொல்லக் கேட்டார் எனினும் அமையும். கேளாமையும் அவ்

வாறே கொள்ளப்படும். இது. நயம்படக் கூற வேண்டு மென்றது. 3

644. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்

மாட்சியின் ம சற்றார் கோள்.