பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

4. வினைத்திட்பம்

(இ ன்) முற்பாடு துன்பம் உறவரினும், துணிந்து செய்க; பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை, (எ-று).

இனி உற்ற பின் ஒல்காமையின் பகுதி கூறுவார், முற்படத் துன்பம் உறவரினும் துணிந்து செய்க பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை என்றார். &

669. உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள் பெருந்தேர்க்

கச்சாணி யன்னா ருடைத்து.

(இ-ள்) யாவரையும் வடிவுண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும்; உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளைகளைக் கழலாமல் தாங்குகின்ற சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உளது; ஆகலான்; (எ-று) .

திண்ணியாரை அறியுமாறு என்னை என்றார்க்கு வடிவு கண்டு அறியலாகாது என்பது உங் கூறிற்று. 9

670. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க

தனுசறொய் தி யுள்ளப் படும்.

(இ-ள்) மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத்திட்டி மானது அரசன் மாட்டு உறுதலையெய்திலான் எல்லாராலும்

நினைக்கப்படும் , (எ-று).

எய்த என்பது திரிந்தது. இது, வினை திட்ப முடையாரை எல் லாரும் விரும்புவாரென்றது. 1 0