பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

9. அவையறிதல்

முதுவர்-தவத்தானும் குலத்தானும் முதிர்ந்தார். இஃது, இருந்த அவையின் கண் முந்துற்றுச் சொல்லல் ஆகா தென்றது. இவை மூன்றும் ஆராய்ந்து சொல்லுமாறு கூறின. 3

14. கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்

சொற்றெரிய வல்லா ரகத்து.

(இ-ள்) நூல்களைக்கற்று, அதன் பயனும் அறிந்தவர்களது கல்வி விளங்கா நிற்கும்; குற்றமறச் சொல்லை ஆராய வல்லார் முன்னர்ச் சொல்லின், (எ-று).

இது, கல்வியின் விழுப்பம் கற்றோர்க்கல்லது அறிதலரிது; ஆதலான் அவர்முன்பு சொல்லுக. அதனானே அக்கல்வி விளங்கும் என்றது. 4.

715. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.

(இ-ள்) சொன்னால் அதற்கு வருங்குற்றத்தை ஆராய்ந்து , நன்மையாமவற்றை யறிந்து, சொல்லுக; சொல்லினது வழக் கா ராய்ந்த நன்மையுடையார், (எ-று).

இஃது, ஆராய்ந்து சொல்லுமாறு கூறிற்று.

7 16. உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்

பாத்தியு ரீைர்சொரிந் தற்று.

(இ-ள்) யாதானும் ஒன்றைச் சொல்லுங்கால், அதனைத் தெரிந்துணரும் அறிவுடையார் முன்பு சொல்லுக; அது வளர்வ தொன்று நின்ற பாத்தியின் கண்ணே நீர் சொரிந்தாற்போலும், (எ-று).

உணர்வது-அறிவது; மேல் சொல் அறிவார் முன்னே சொல்லுக என்றார்; அப் பொருள் அறிவார் முன்னர்ச் சொல்லுக என்பது உம், அச்சொல்லினாலே தம் கல்வி வளரும் என்பது உம்

கூறிற்று.