பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

3. பொருளியல்- 1. நாடு

செல்வம்-பொன்னும் பசுவும் பலவாயின மிகுதல். விளைவா வது, பல தானியங்களும் பொலிவுடைமை. இன் மாவது, கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் இன்புறப்படும் பொருள்களை யுடைமை. காவலாவது, மாற்றரசனாலும் தன் அரசனாலும் நலி வின்மை. மேல் நாட்டிற்கு அங்கமாவன கூறினார், இஃது அழகா வன கூறிற்று. 2

733. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்த ரு நாடு.”

(இ-ள்) நாடென்று சொல்லுவர் தேடவேண்டாத வளத் தினை யுடைய நாட்டை; நாடல்ல வென்று சொல்லுவர். தேடினால்

வளந்தருகின்ற நாட்டை. (எ-று).

இஃது, எல்லா நிலத்தினும் உள்ள பண்டம் கலத்தினாலாதல் ாலினாலா தல் தன்னிடத்தே உடைத்ததாதலும், தன் நிலத்தில்

-ஸ்ள பண்டத்தை மிகுதியாக உடைத்ததாதலும் வேண்டுமென்றது.

734. தள்ளா விளையரளுத் தக்காருந் தாழ்விலாச்

செல்வருஞ் சேர்வது நாடு.

( இ-ள்) தப்பாமல் விளையும் நிலங்களும், தகுதியுடையாரும் ாழ்வில்லாத செல்வரும் சேருவது நாடு, (எ-று).

தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவி போகாத நிலம். தக்கார்-குலத்தாலும் குணத்தாலும் அமைந்தார். தாழ் வில்லாத செல்வர்-பிறரால் இகழப்படாத செல்வர்; பிறர்க்கும் பயன்படும் செல்வர் எ ன் ற து. இம்மூன்றும் எல்லா உயிர்க்கும் ஆகலின் சேரவேண்டும் என்று கூறப்பட்டது. 4.

~ 735. உறுபசிய மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு. --

(இ-ள்) மிக்க பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும் சேராது இயன்றது நாடு, (எ-று).

இது, சேர்த லாகாதன இவை என்று கூறிற்று. 5

3.