பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

2. அரண்

745. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை

யூக்க மழிப்ப தரண் .

(இ-ள்) காக்க வேண்டும் இடம் சிறிதாய், ம தி ல க ல ம் பெரிய இடத்தை யுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது, (எ-று).

சிறுகாவலாவது ஒருபக்கம் மலையாயினும் காடாயினும் சோயிலும் உடைத்தாதல். இஃது இடம் பெரிதாகவும் காவல் சிறிதாகவும் வேண்டுமென்றது. 5

---

748. கொளற்கரிதாய்க் கொண்டகூ 1ழ்த் தாகி யகத்தார்

நிலைக்கெனிதா நிர தரண் .

(இ-ள்) பகைவரா ல் கொ ள்ளுதற்கு அரிதாய்த், தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உ ைடத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுமுடைத்தா யிருப்பது அரணாவது, (எ-று). m

எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிய நீரை யுடைத்தாக வேண்டு மென்றவாறாயிற்று: அஃதாவது அரனுக்கு நீங்குகிற்பதோர் ஆற்றி னின்றும் பிறர்க்குத் தோற்றாமல் சுருங்கையாகப்படுத்து உள்ளே நீர்புகுதலும், மதிலைமுற்றினார்க்கு அ ைன ய நீரின்மையும், இன்னும் அதனானே வெற்றிலையும் பூவும் உள்ளே உண்டாக் குதலும் பிறவும் ஆம் f;

747. எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவும்

நல்லா ளுடைய தரண். (இ-ள்) எல்லாப்பொருள்களையும் உடைத்தாய், உ ற் ற

விடத்து உதவ வல்ல நல்ல வீரரையுமுடையது அரண், (எ-று).

இது நல்ல வீரரும் வேண்டும் என்றது. எல்லாப் பொருளு மாவது நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும். 7

748. முற்றிய முற்றா தெறிந்து மறைப்படுத்தும்

பற்றற் கரிய தரண் .