பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

1. குடிமை

(இ-ள்) ஒருவர் தமக்கு நலம் வேண்டுவாராயின், நாணு டைமையை விரும்புக; அவ்வண்ணமே, குலத்தை விரும்புவாராயின் யாவர் மாட்டும்.தாழ்ந்தொழுகுதலை விரும்புக, (எ-று).

இது பணிந்தொழுக வேண்டு மென்றது. 8

959. குடிப் பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.

(இ-ள்) உயர்குடிப் பிறந்தார் மாட்டுக் குற்றமுளதாயின், அ.து வானத்து மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும்; ஆதலால், குற்றப்படஒழுகற்க, (எ-று).

இது, குற்றஞ் செய்தலைத் தவிர வேண்டுமென்றது. 9.

960. நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்

குலத்தின் க ணையப் படும்.

(இ-ள்) ஒருவன் குடிநலத்தின் கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின், அவன்ைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப் படுக, (எ-று).

இதனா னும் குடிப்பிறந்தார் நீரல்ல செய்யார் என்று நன்கு மதித்தவாறாயிற்று. 10

2. 6Tb

மானமாவது எல்லாக்காலத்தினும் தமது நிலைமையின் திரி யாமை. இது குடிப்பிறந்தார்க்கு இன்றியமையாமையின் அதன் பின் கூறப்பட்டது. இது மூவகைப்படும்; தமது தன்மை குன்றுவன செய்யாமையும், இகழ்வார் மாட்டுச் செல்லாமையும், இளிவரவு

பொறாமையுமென.