பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

3. பெருமை

971 பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

(இ-ள்) எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும், தத்தம்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது, எ-று).

எனவே, பெருமையாவது குலத்தினான் அறியப்படா தென்ப தா உம் அதற்குக் காரணமும் கூறிற்று. I

972. மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்

கீழுல்லார் கீழல்ல வர்.

(இ-ள்) மேலான இடத்திலிருந்தாலும். மேன்மையில்லா தார் மேன்மக்களாகார்; கீழான இடத்திலிருந்தாலும், கி ழ் ைம

/ i வில்லாதார் கீழ்மக்களாகார். (எ- று) .

இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம். இது செல் வத்தினால் பெரியாரையும் பெரியாரென்று கொள்ளப்படா

தென்றது. 2

973, இறப்போ ரிருத்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்

சீரல் லவர்கட் படி ன்.

(இ-ள்) செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற் குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உ டை த்தாம். (எ-று).

சீரல்லவர்-பெரியவரல்லவர். மேற்கூறியவற்றிற்குக் காரணம் கூறிற்று. 3

974. பெருமை பெருமித மின்மை சிறுமை

பெருமித மூர்ந்து விடும்.

(இ-ள்) பெருமையாவது செருக்கின்மை; சிறுமை செருக் ைென மேற்கொண்டொழுகுமாதலான், (எ-று).